\
எமது பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும், திறன்களை விருத்தி செய்யவும் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் பழைய மாணவர்களாகிய 2009 O/L batch & 2012 A/L batch பாடசாலைக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த 125 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.
குறித்த உதவிகளை வழங்கியமைக்காக பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.




