கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற Knight Ro-2025 கல்விக்கண்காட்சியில் எமது பாடசாலை மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் குறித்த கண்காட்சியில் சிறந்த புத்தாக்கங்களை காட்சிப்படுத்திய எமது பாடசாலையின் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று (02/09/2025) எமது பாடசாலையின் அதிபர் அருட். சகோ.ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவர்களின் பங்குபற்றுதலுக்கு ஊக்கமளித்த பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பிரதி அதிபர்கள், உப அதிபர்கள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.







