அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான பெரு விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பதக்கம் வென்று எமது பாடசாலையின் கராத்தே அணி – தேசிய மட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 09, 10, 11 ஆகிய திகதிகளில் திருகோணமலை மகேஸர் உள்ளக விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் கல்முனை வலயத்தில் அதிகூடிய பதக்கங்களை பெற்று எமது பாடசாலையானது முன்னிலையில் உள்ளதுடன் 16, 18 மற்றும் 20 வயதுப்பிரிவு ஆண்கள் கராத்தே அணி மாகாண மட்டத்தில் 03 முதலாம் இடங்களையும் , 01 இரண்டாம் இடங்களையும் , 03 மூன்றாம் இடங்களையும் பெற்று மொத்தமாக 07 பதக்கங்களுடன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
குறித்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 15/07/2025ந் திகதி எமது பாடசாலையில் அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது. குறித்த நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு M. L.M. Mutharris அவர்களும், ஆசிரிய ஆலோசகராக (உடற்கல்வி) கடமையாற்றும் திரு A. M. Ansar அவர்களும் வருகைதந்திருந்ததோடு போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர் S.பாலுராஜ் அவர்களுக்கும், உடற்கல்விக்குப் பொறுப்பாளராக காணப்படும் திரு.S கோணேஸ்வரன் ஆசிரியர் அவர்களுக்கும், ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர்கள், உப அதிபர்கள் ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டிகளில் பங்குகொள்வதற்காக ஊக்கமளிக்கும் குறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.










