கிழக்கிலங்கையில் புகழ்பூத்த எமது பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா

கிழக்கிலங்கையில் புகழ்பூத்த எமது பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா

இன்று(17/08/2025) கிழக்கிலங்கையில் புகழ்பூத்த எமது பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான நடைபவனி பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழும் 125th Jubilee குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புடனும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எமது பாடசாலையின் பழைய மாணவரும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான திரு Y. Jeyachandran Sir அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலையினால் 125ஆண்டுகளில் கல்வி மற்றும் கல்வி சாரா வெற்றிகளை வெளிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிக்கிண்ணங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் தரை, வான், கடல் மூலம் பாடசாலைக் கொடி பறக்கவிடப்பட்டது விசேட அம்சமாவதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் குறித்த நடைபவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அனுசரனையாளர்கள், 125ஆவது ஆண்டு குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்,பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள்,பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், தாக சாந்தியினை ஒழுங்கு செய்த நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top