School Anthem
Carmel Fatima School Anthem
கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே
மங்கிடாத ஒளி பொங்க என்றும் வாழவே
செங்கழல் பொன் மலர் கொண்டு போற்றினோமே.
கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!
எங்கள் கலைக் கோயில் கார்மேல் பற்றிமா
உந்தன் ஒளி பரப்பி ஈழமணிநாடு மிளிரவே
எந்த நாளும் அன்புடனே இயங்குவாய்
கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!
தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே
தாயம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே
நேயமாக ஆற்றி நீடு வாழ்க
கார்மேல் பற்றிமாக் கல்லூரி இறையருளிலே
ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்!
What Defines Our Legacy of Excellence
We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.
A legacy of knowledge and discipline