தென் கிழக்கு பல்கலைகழகத்தினால் 2025.02.27அன்று Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition) எமது கமு/கமு/கார்மேல் பற்றிமா கல்லூரியைச் சேர்ந்த வர்த்தக பிரிவு மாணவர்களாகிய A.C.Anrolina,A.Jironshi,
S.Shruthi,P.Karshana ஆகியோர் CARMELIAN அணி எனும் தமது நாமத்துடன் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினர்(Winner).இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பிரபல்யமான 30 பாடசாலைகள் பங்குபற்றியதுடன் இப் போட்டியானது ஆரம்பச்சுற்று, இறுதிச்சுற்று என இரு சுற்றுக்களை கொண்டிருந்தது. இவ் இரு சுற்றுக்களிலும் எமது பாடசாலை மாணவர்கள் முதலாவது இடத்தை பெற்று Winner ஆக தெரிவு செய்யப்பட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி மற்றும் பேராசிரியர் குழு ரூபா 25000 பணபரிசும் வெற்றிச்சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். இப்போட்டிக்காக மாணவர்களை தயார்படுத்திய எமது வர்த்தக துறை ஆசிரியர்களான Mrs.Yuvarani Alosiyas மற்றும் Mrs.Nalini Mohanakumar அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

