கிழக்கில் புகழ்பூத்த பாடசாலையான எமது பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது அதிபர் அருட் சகோ.S.E.றெஜினொல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் Mr.Chinthaka Abeywickrama Sir அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் Mr.MS.Sahathul Najeem Sir அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் Mr.M.M.Aseek Sir அவர்களும்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் Mr.T.Athisayaraj Sir அவர்களும் மற்றும் மட்டக்களப்பு உள்ளூர் அரசாங்க அலுவலகத்தின் உதவி ஆணையாளர் Mr. S. Partheepan Sir அவர்களும் கலந்து சிறப்பித்தனர். குறித்த நிகழ்வில் 1000 மாணவர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்ற உடற்பயிற்சி உட்பட 125 மாணவர்கள் கொண்டமைந்த உடற்பயிற்சி கண்காட்சியும் இடம் பெற்றது மேலும் மேலைத்தேய வாத்திய(Band) இசைக் கண்காட்சியும் இடம்பெற்றது. முதலிடத்தினை இமனுவல் இல்லம் பெற்றுக்கொண்டதோடு இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை முறையே டொரதியா இல்லம், மத்தியூ இல்லம், மேபில் இல்லங்களும் பெற்றுக்கொண்டன.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்கிய பாடசாலையின் Jubilee குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும், டொல்பின் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் மற்றும் எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள், இல்லங்களுக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்டு நேரலையினை வழங்கிய,வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்த ஊடகங்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.















