வவுனியா வடக்கு வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின் வாண்மை விருத்தி களப்பயணம்

வவுனியா வடக்கு வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின் வாண்மை விருத்தி களப்பயணம்

வவுனியா வடக்கு வலயக்கல்வி அதிகாரிகளும் குறித்த வலயத்திற்குட்பட்ட அதிபர்களும் இணைந்து வாண்மை விருத்தி களப்பயணம் ஒன்றினை 13/06/2025ந் திகதி எமது பாடசாலைக்கு மேற்கொண்டிருந்தனர் குறித்த குழுவினர் வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.T.லெனின் அறிவழகன் அவர்களின் வழிகாட்டலில் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன் அவர்களின் தலைமையின் கீழ் வருகை தந்தனர்.

மேலும் இக்குழுவில் நெடுங்கேனி கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி.S.சிவசிதம்பரம் அவர்களும் ஆசிரியர் வள நிலைய முகாமையாளரான திரு.S.ஜெயச்சந்திரன் அவர்களும் குறித்த வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் உட்பட 50 பேர் இக்களப்பயணத்தில் பங்கேற்றனர். இதன் போது பாடசாலையின் கற்றல் கற்பித்தல், கவின் நிலை மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான அனுபவங்களை அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் வகுப்பறைகளையும் பார்வையிட்டனர். எனவே குறித்து களப்பயணத்திற்கு வழிகாட்டலை வழங்கிய வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் தலைமை தாங்கிய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் அவர்களுக்கும் ஏனைய கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் அனைவருக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top