எமது பாடசாலையில் பணிபுரிந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆய்வு கூட உதவியாளர்களான திரு.T. கண்ணன், திருமதி.P.சசிகுமார் மற்றும் திருK.சந்திரமோகன் அவர்களையும் பாடசாலை பணியாளர்களாக கடமையாற்றிய திருK.மாணிக்கவேலு மற்றும் திரு S.மயூரதன் அவர்களையும் வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது அவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பாடசாலைக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி நினைவுப்பரிசில்களும் வழங்கி இன்று(01/07/2025) கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.





