பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழா

பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழா

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் 20/09/ 2025 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக எமது பாடசாலை முன்னால் அதிபர் அருட் சகோதரர் S. சந்தியாகு FSC அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக அருட் சகோதரர் M. ஸ்ரிபன் மத்தியு FC அவர்களும், அருட் சகோதரர் FR.விரைனர் செலர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், 750 க்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கல்வி சாரா ஊழியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற ஆசிரியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற கல்வி சாரா ஊழியர்கள், தற்போது பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததுடன், அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top