கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் பரிசளிப்பு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் 04/09/ 2025 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக De La Salle துறவற சபையின் இந்தியா மற்றும் இலங்கைக்கு பொறுப்பாக உள்ள அருட் சகோதரர் A. Christy Croos FSC அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கழைக்கழக பேராசிரியர்களான Prof.S.Arasaretnam அவர்களும், Prof.T. Sathaananthan அவர்களும், தென்கிழக்குப்பல்கழைக்கழகத்தின் தொழில்நுட்பப்பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றும் Dr.U.L. Abdul Majeed அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியியளாளர் G. Sujitharan அவர்களும், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் திருமதி T.Kirupairajah அவர்களும், விசேட விருந்தினர்களாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி M.H.Riyasa அவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.A. Sanjeevan அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் Carmelian of the Year விருதும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர்,பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.






