கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் சிறுவர் தின மற்றும் மாணவ தலைவர்கள் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் 03/10/ 2025 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக DR.G. சுகுனன் ( DIRECTOR BASE Hospital)அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக MRS.R.சஜிந்திரன் (Divisional secretary – navithanveli) அவர்களும், MR.T.கஜேந்திரன் (Divisional secretary – thampilivil) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், MR.K.அரசரெட்னம் ( chief accountant – MC batticaloa) , MRS.P.சுகீஸ்வரன் (accountant Zonal Education office batticaloa),
MR.N. சிவரஞ்சித் ( attorney at law), MR.MS. காரியப்பர்( senior attorney at law), MR.S.பரமேஸ்வரன் (Rtd teacher), MR.T.D.பத்மகமலநாதன்( Rtd teacher), DR.S.தனுசியா( ampara hospital), DR.K.அருள்ராஜ்( Kaluwanchikudy hospital) , MR.S துஸ்யந்தன் (audit officer), MR.A.அப்துல் ரசாக் ( inspector of school works) என்பவர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.




