பாடசாலையின் மாபெரும் கல்வி கண்காட்சி – 2025

பாடசாலையின் மாபெரும் கல்வி கண்காட்சி – 2025

எமது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையினுடைய 125 ஆம் ஆண்டின் கால் தடம் பதித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த அழகான தருணத்தில் பல பிரம்மாண்ட நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எம்முடைய பாடசாலையின் பிரமாண்ட நிகழ்வாக மாபெரும் கல்வி கண்காட்சி அனைவரும் மனதிலும் நீங்காத ஒன்றாக வரலாற்று பதிவினை இட்டுச் சென்று இருக்கின்றது. தொடர்ச்சியாக மூன்று நாட்களும் 15000 பார்வையாளர்களைக் கடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலையினுடைய மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் என்று ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து இந்த கண்காட்சியினை கண்டுகளித்து இருந்தார்கள். உண்மையிலே கல்வியினை மேம்படுத்து முகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த கண்காட்சியானது அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள ஒன்றாக மாறி இருக்கிறது.

எமது பாடசாலையினுடைய பெண்கள் பிரிவு, ஆண்கள் பிரிவு, மைதானம் போன்ற இடங்களிலே மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த கண்காட்சியானது சிறப்பான முறையில் எம்முடைய பாடசாலையினுடைய ஆளுமை மிக்க ஆற்றல்மிக்க அதிபர் வணக்கத்துக்குரிய அருட்சகோதரர் S.E றெஜினோல்ட் FSC அவர்களின் வழிகாட்டலில் எம்முடைய பாடசாலையினுடைய பிரதிஅதிபர்கள், உபஅதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசார், சாரா ஊழியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உடைய உறுப்பினர்கள், பாடசாலையினுடைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், எம்முடைய பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்கள் இவர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிகவும் பிரம்மாண்டம் கண்டிருந்தது எம்முடைய இந்த மாபெரும் கல்வி கண்காட்சி 1900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 2025 ஆம் ஆண்டில் தனது 125 ஆவது ஆண்டில் கால் தடம் பதித்து இந்த ஆண்டிலே வரலாற்றுப் பதிவாகிய எம்முடைய இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை வலயத்தில் கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியானது இடம்பெற்றிருக்கின்றது. கடந்த மூன்று நாட்களாக எங்கு பார்த்தாலும் யாருடைய நாவில் ஒலிக்கின்ற ஒரே வார்த்தை எம்முடைய பாடசாலையினுடைய கண்காட்சி உண்மையிலேயே பலராலும் பாராட்டப்பட்டு இன்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்து நிற்கின்றது.
எனவே குறித்த கண்காட்சியினை சிறப்பாக மேற்கொள்வதற்கு எமக்கு நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ உதவிபுரிந்த அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top