எமது பாடசாலையில் சாரணிய மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது அதிபர் அருட் சகோ.ச.இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலமையின் கீழ் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக I.L.M. இப்ராகிம் (திட்டமிடலுக்கான உதவி மாவட்ட ஆணையாளர்), M.A. சலாம்(அதிபரும் தேசிய சங்க சாரணிய பயிற்றுவிப்பாளர்) மற்றும் K.M.தமீம்( தேசிய சங்க சாரணிய பயிற்றுவிப்பாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு சாரணிய மாணவர்களுக்கான சின்னங்களும் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு பொறுப்பாக காணப்பட்ட திரு. A. வேணுகுமார் ஆசிரியர் அவர்களுக்கும், உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





