இன்று(29/08/2025) எமது பாடசாலையில் நடன ஆசிரியராக கடமை புரிந்த திருமதி மாதுமையாள் வரதராஜன் ஆசிரியர் அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அவர் ஆசிரியர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவரை வாழ்த்தி வாழ்த்துப்பாமாலையும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் அவரின் பிறந்ததினத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு அனைவராலும் வாழ்த்தப்பட்டார். அவரின் சேவை தொடர்ச்சியாக சமூகத்திற்கு கிடைக்க வேண்டும் என பாடசாலைச் சமூகம் சார்பாக இறைவனை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.









