எமது பாடசாலையில் மாணவர்களின் ஆளுமையினை வளர்க்கும் வகையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் பாராளுமன்ற தேர்தலானது பாடசாலையின் அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் இன்று(25/06/2025) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதோடு அவர்கள் வாக்களிக்கும் விதம் தொடர்பிலும் அறிந்துகொண்டனர்.
குறித்த செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பினை வழங்கிய பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்







