25/07/2025ந் திகதி நடைபெற்ற மாகாணமட்ட எறிபந்தாட்டப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்களுக்கான எமது பாடசாலையின் அணி ( 1st Runner up) இரண்டாமிடத்தை பெற்று வெற்றி ஈட்டியுள்ளதோடு தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எறிபந்தாட்டப் போட்டியின் பயிற்சிக்கு பொறுப்பாக உள்ள அருட்.சகோ.A.தேவராஜா அவர்களுக்கும் பயிற்றுவிப்பாளரான P.ஜுவிதன் அவர்களுக்கும், எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றுவதற்கு மாணவர்களை ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.







