கடந்த 28/07/2025ம் திகதி மற்றும் 29/07/2025ஆம் திகதிகளில் இடம்பெற்ற மாகாணமட்டத்திலான கைப்பந்துப் போட்டிகளில் 17வயதுக்கு உட்பட்ட எமது பாடசாலையின் மாணவியர்கள் பங்குபற்றியிருந்தனர். இப்போட்டியில் குறித்த மாணவ அணியினர் இரண்டாமிடத்தினை பெற்று வெற்றி ஈட்டியுள்ளனர் . மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி .ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான திரு.க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றுவதற்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
