எமது பாடசாலையானது 125ஆவது ஆண்டினை சிறப்பித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்று (30/06/2024)எமது பாடசாலையில் அதிபர் தினமானது வெகுசிறப்பாக இடம்பெற்றதோடு சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள அருட் சகோதரர் அ.தேவராஜ் (Thaya Brother) அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், லண்டன் கிளையின் நிறைவேற்று உறுப்பினர் திரு.J.ஆனந்தா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு பிரதி அதிபர்கள்,உபதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் 125ஆவது ஆண்டு Jubilee குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் எமது கல்லூரியின் அதிபரினது சேவை சிறப்பாக தொடர்வதற்கும், அருட் சகோதரர் அ.தேவராஜ் அவர்கள் எமது பாடசாலைக்கு ஆற்றிய பல்வேறு சேவைகளுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.












