கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான எமது பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் கலை விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழும் 2025/07/19 அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன்.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் P.பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பிரம்மாண்டமான மேடை அலங்கரிப்புடன் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அனுசரனையாளர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.












