பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு – 2025

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு – 2025

இன்று(30/04/2025) எமது கல்லூரியில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வெளியான G.C.E.A/L 2024 (2025) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30) காலை ஒன்றுகூடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை மாணவத்தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் அதிபர்,பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு மாணவர்கள் அவர்களின் அனுபவப் பகிர்வினை கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு ஆசிரியர்களோடு இணைந்து செயற்பட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி உத்தி யோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு இரவு பகல் பாராது அனைவரையும் வழி நடத்திய எமது அதிபருக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற பழைய மாணவர் சங்க UK, Australia கிளைகளுக்கும், எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், Jubilee குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இவ் பெறுபேற்றை பெற்று தந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

What Defines Our Legacy of Excellence

We are proud to be a community built on trust, dedication, and vision. With generations of students passing through our classrooms, Carmel Fatima College National School continues to provide a nurturing, disciplined, and academically rich environment where every learner is prepared to succeed and lead with confidence.

Students
+ 0
Inspired learners across all grades
Teachers
+ 0
Dedicated mentors and subject experts
Years Of Service
0

A legacy of knowledge and discipline

Class Rooms
+ 0
Modern, student-focused learning spaces
Scroll to Top